வாஸ்து ஒரு போலியான தத்துவம் என்று சொல்லும் மனிதர்கள் இரண்டு வகை :
ஒன்று... வாஸ்து என்றால் என்ன என்பதை முழுமையாக அறியாதவர்கள். இரண்டு...
வாஸ்து என்ற நல்ல அறிவியலை பயன்படுத்த கொடுத்து வைக்காதவர்கள். எந்த ஒரு
இடத்திலும் உள்ள முக்கியமான வாஸ்து குறைகளை கண்டறிந்து அந்த குறையை சரி
செய்யாமல் மற்ற எந்த சிறிய மாறுதல்கள் செய்தாலும் அதன் பலனை உணர முடியாது.
பலர் வாஸ்து பற்றி முழுவதும் அறிந்து கொள்ளாமல் சிறிய மாற்றங்களை
தாங்களாகவே செய்துவிட்டு வாஸ்து செய்தேன் பயனில்லை என்று கூறுகிறார்கள்.
கேன்சர் நோயுள்ள ஒருவருக்கு தலை வலிக்கு மட்டும் மாத்திரை கொடுத்தால் என்ன
பயன் தரும்? வாஸ்து பற்றிய இந்த புத்தகத்தை படிப்பவர்கள் கண்டிப்பாக ஒரு
விழிப்புணர்வு அடைவார்கள் என்ற நம்பிக்கையுடன், நான் பல ஆண்டுகளாக
ஆராய்ந்து, அனுபவத்தில் உண்மை என்று உணர்ந்து, தெரிந்து கொண்ட விஷயங்களை
எளிதாக எழுதியுள்ளேன்.