பெரியவர்கள்
உலகம் வேறு; மழலைகளின் உலகம் வேறு. பெரியவர்களிடம் பேசுவதுபோல்
மாணவமணிகளிடம் பேசக்கூடாது. வயதில் மூத்தவர்களை அணுகுவதுபோல் மாணவக்
கண்மணிகளை அணுகக்கூடாது. அவர்கள் இளம் தளிர்கள்; மென்மையான மலர்கள்!
அவர்கள் மனம் புண்படக்கூடாது; அவர்கள் வருத்தப்படக்கூடாது; அவர்கள்
எதற்கும் அச்சப்படக்கூடாது. அப்படி நாம் அவர்களை
வளர்க்கவேண்டும்.குழந்தைகளைக் காப்பகங்களில் விடுவதையும், பெற்றோர்களை
முதியோர் இல்லங்களில் விடுவதையும் இன்றைய மக்கள், முன்னாள் மாணவர்கள்
விடவேண்டும். பெற்றோர்களுக்காகவும் பெற்ற குழந்தைகளுக்காகவும் இன்றைய
தலைமுறை தனது நேரத்தை செலவிடவேண்டும்.