
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.89

Opening the world of stories

Sivaji Nadigar Mudhal Thilagam Varai
Free shipping over ₹500
தமிழ்த் திரையுலகில் சிவாஜி கணேசன் என்கிற பெயர் கல்வெட்டாகிவிட்ட ஒன்று. அவரது நடிப்பை குறித்துப் புதிதாகப் பேச எதுவுமில்லை என்ற நிலையில், சிவாஜி கணேசன் என்கிற ஆளுமை உருவான வரலாறு அனைவரும் அறியப்பட வேண்டிய ஒன்று.
மிகச் சாதாரண பின்னணியிலிருந்து கஷ்டப்பட்டு உயர்ந்து, நடிப்பில் நிகரற்ற உயரங்களைத் தொட்ட சிவாஜி கணேசனுக்கு முன் மாதிரிகள் அதிகமில்லை.
அவரது கலை, அவரிடமிருந்தே உதித்தது. பின்னால் வந்த பலருக்கு அவர் முன்மாதிரியானதை யாரும் மறுக்கமுடியாது.
சிவாஜி கணேசனின் நடிப்புலக வாழ்க்கை, தனி வாழ்க்கை இரண்டும் இந்நூலில் மிகைக் கலப்பற்றுப் பதிவாகியிருக்கின்றன.
நூலாசிரியர் பா. தீனதயாளன், ஒரு பத்திரிகையாளர். தினமணி உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருபவர்.
கடும் உழைப்பையும், ஆய்வையும் உள்ளடக்கிய இந்நூல், சிவாஜி கணேசன் என்கிற ஒரு நடிகரின் வாழ்க்கை வரலாறாக மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துத் தமிழ்த்திரையுலகின் வரலாறாகவும் மலர்ந்திருப்பது முக்கியமானது. '