திருவண்ணாமலை ஈசன் உமையம்மையோடு இணைந்து அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி கொடுத்த தலம். எனவே அம்பிகைக்கு உகந்த பௌர்ணமிநாளில் ஐயனின் திருவடிவான மலையை வலம் வருவது மிகவும் சிறப்பு. கிரிவலம் நடந்தே செல்லவேண்டும், வாகனங்களில் செல்லக்கூடாது. மலையைத் தரிசித்தபடியே வலம் வரும் வகையில், கிரிவலப்பாதையின் இடப்பக்கமாகவே பயணிப்பது சிறப்பு.