"ஊகூம்... இப்போ எதுவும் சொல்றதா இல்லை. வந்து சொல்றேன்... ஓ.கே...." 'அம்மாடி! வயித்தில் பாலை வார்த்தியே... வரேன்னு சொன்னாயே... அதுபோதும்..." முதலில் விழித்துவிட்டு... பிறகு புரிந்து கொண்டவளாய் "ஓ... நான் இப்படி அழகாய் அலங்கரித்துச் செல்வதைப் பார்த்து.... சந்தேகமாக்கும்... அசட்டு அம்மா.. அப்படியெல்லாம் ஓட்ற முட்டாள் இல்லை உன் பெண். இருந்து சாதிக்கிறவம்மா... அதான்... சாதனான்னு பேர் வச்சிருக்கேயே... அய்யோ... நேரமாச்சு... அப்பாகிட்டே சொல்லிடு..." ஓடாத குறையாய் சென்ற மகளை வெறித்தவாறு நின்றாள் தாய்... என்னவோ புதிர் போட்டு விட்டுப் போகி றாளே... இது நல்லதற்கா... கெட்டதற்கா என்று தெரிய வில்லையே... ஈசுவரா.. கல்பனாவின் மனம் பதைத்தது...