தன் அலுவலகப் பையை எடுத்துக் கொண்டு புறப்படவும் வாயில் வரை இருவரும் நடக்க ஆரம்பித்தனர். தினமும் கணவரின் கார் வரையிலும் சென்று வழியனுப்புவது வழமையான ஒன்று. மந்திராவுக்கு 18 வயதில் திருமணமாகி தற்போது 22 வயதில் மகள் இருந்தாலும் பொலிவிழக்காத முகம். காதலனாய் தாங்கும் கணவனின் அன்பில் மன நிம்மதியும், மலர்வும் அவர் தேகத்தை வாட விடாமல் வைத்திருந்தது.