கீரையில் பலவகைக் கீரைகள் உள்ளன. அவற்றில் சுமார் 20 வகைகளைத் தவிர பிற கீரை வகைகளை நாம் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. முதலில் உங்களுக்கு நன்கு அறிமுகமான கீரைகள், இதுவரை நீங்கள் சமைத்து சாப்பிட்ட கீரை வகைகளை எல்லாம் பட்டியலிடுங்களேன்... பிறகு தெரியும் நமக்குத் தெரியாமலும், இன்னும் சமைத்து உண்ணப்படாமலும் எத்தனை, எத்தனை கீரை வகைகளை நாம் விட்டு வைத்திருக்கிறோம்