ஒரு விடயத்தைக் கதையாய்ச் சொல்வதில் இருக்கும் சுவாரசியம், சுவை
எனக்கோ அல்லது எனக்குத் தெரிந்தோ நடந்த ஒரு நிகழ்வைப் பற்றிச் சிந்திக்கையில் ‘இது இப்படி இல்லாமல் அப்படி நடந்திருந்தால்?’ என்ற வினா அடிக்கடி எழும் எனக்கு, ஒரு நிகழ்வின் பலவகைச் சாத்தியங்களை நான் என் மனத்தில் நிகழ்த்திப் பார்ப்பேன், அவற்றில் ஒன்றோ சிலவோ மிக சுவாரசியமாக இருக்கும்போது அதை ஒரு கதையாக எழுதத் தோன்றும்
அறிவியல் புனைகதைகளைப் பொறுத்தவரை ஒரு அறிவியல் கருத்தின் அடிப்படையில் ஒரு கதை தோன்றும், அப்போது அதனைக் கதையாக எழுதத் தோன்றும்
அறிவியலில் இருக்கும் தன்முரண் () தோற்றப்பாடுகளைப் பற்றிச் சிந்திக்கையில், அவற்றை வாழ்வின் தருணங்களோடு பொருத்திப் பார்க்கையில் சில கதைகள் தோன்றும்…