தேவகி முத்தையா என்பவர் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்கு அபிராமி பட்டரின் “அபிராமி அந்தாதி” எனும் நூலினை ஆய்வு செய்து
சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்துப் பட்டம் பெற்றிருக்கின்றார். இவரது ஆய்வேடு பல்கலைக்
கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பின் தருமை ஆதீனத்தின் ஞானசம்பந்தப் பதிப்பக
வெளியீடாக “அபிராமி அந்தாதி ஆராய்ச்சி” என்ற பெயரில் நூலாக வெளியிடப்
பெற்றிருக்கின்றது. அபிராமி அந்தாதிப் பாடல்களை விளக்கி “அபிராமி அந்தாதி
விளக்கவுரை” எனும் தலைப்பிலும் இவர் நூலாக வெளியிட்டுள்ளார்.