எழுத்துலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு சாகித்ய அகடமி விருது பெற்றுச் சாதனை படைத்தவர் எழுத்தாளர் நீல. பதமநாபன். அவர் எழுதியுள்ள யாத்திரை, அனுபவங்கள், சமரு ஆகிய மூன்று குறுநாவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. யாத்திரை குறுநாவலில் இறந்தவனின் கடைசி யாத்திரை பலவிதமான நினைவோட்டங்களை எழுப்புகிறது. இறந்தவரைப் பாடையில் தூக்கிச் செல்லும்போது நான்குபேர் இவனுடைய சிந்தனைப் போக்கு , அவனது இறப்பு ஆகியவற்றைப் பற்றிய பழைய நினைவை அசைபோட்டுப் பார்ப்பதாக கதை நகர்கிறது. பொறியியல் வல்லுநரான நீல, பத்மநாபன் மனிதர்களின் சிந்தனைப் பொறிகளை ஒரு மையத்தில் குவித்துக் காட்டுவதில் வல்லவர். மூன்று கதைகளிலும் பலவிதமான மன உணர்வுகளைப் படைத்துக் காட்டுகிறார்.
- பதிப்பகத்தார்.