மானுட சிருஷ்டியின் மகத்தான மர்ம முடிச்சுகளை அறிந்தவர்கள் சித்தர்கள். பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கும் கோடான கோடி அணுக்கூறுகளின் நுட்பத்தை தன்வசமாக்கிக் கொண்டவர்கள் இந்த சித்தர்கள். சித்தர்கள் சிவத்தைக் கண்டவர்கள். சுத்த - அசுத்த மாயைகளால் தீண்டப்பட்டாலும் எதனாலும் கரைபடாதவர்கள். பற்றுக்களால் பற்றப்படாமல் வாழ்பவர்கள். ஜனன மரணத்தின் ஓயாத அழைப்பில் வாழ்வின் ரகசியங்களை மனஇருள் நீக்கி ஞானஒளிபரப்பி நம்முன் உணர்த்தியவர்கள் சித்தர்களே! தலையிலிருந்து கிளம்பும் ஒளியின் மூலமாகவே சித்தர்களை அடையாளம் கண்டு நாம் அனைவரும் அவர்களைத் தரிசிக்கிறோம்.