முனைவர். நா. சங்கரராமன் தற்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்
எஸ்.எஸ்.எம், கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக
பணியாற்றி வருகிறார். பேராசிரியர் பணியில் 9 ஆண்டுகால அனுபவம் பெற்ற இவர்
பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் (நிகழ்ச்சிகளை
நடத்தி வருகிறார். பல்வேறு இதழ்களிலும் தன்னம்பிக்கை குறித்த கட்டுரைகளை
எழுதி மாணவர் மத்தியில் நம்பிக்கை விதைகளை தினந்தோறும் தூவி வருபவர்.
சதாபாரதி எனும் பெயரில் முகநூலில் எழுதிவருபவர். உலகை மாற்றிய
கண்டுபிடிப்புகள், நினைவுகள், வெற்றிகள் விற்பனைக்கு அல்ல என்ற நூல்களைத்
தொடர்ந்து வெளிவரும் அறிவுரைகள் ஜாக்கிரதை இவரது நான்காவது நூலாகும்.