பரந்து விரிந்து கிடக்கும் பாரத நாட்டில், மராட்டிய மாநிலத்தில் தோன்றி வீரதீரச் செயல்கள் புரிந்து விடுதலை வேட்கைக்கு வித்திட்ட வீரசிவாஜி மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளார் என்றால் அது மிகையாகாது. முகலாய சக்கரவர்த்திகள் பரதகண்டமு முமுவதையும் தம் ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டுமென கண்ட கனவை பகற்கனவாக்கியவர் வீரசிவாஜி. வீரசிவாஜியின் வாழ்க்கை வரலாறு உள்ளத்தை அள்ளுவதாகும். சிவாஜியின் வரலாறு இந்திய நாட்டின் வரலாற்றின் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.