நன்னெறி நற்கதைகள் எனது 44-வது நூல். எனதருமை தெய்வத்திரு தந்தையார் அவர்களின் அருளாசியால் நான் எழுதிக் கொண்டே இருக்கிறேன். நீதி நெறிக் கதைகள் என்ற எனது நூல் ஒரு பள்ளியில் பாட நூலாக வைக்கப்பட்டுள்ளது. அதை அறிந்து ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் என்னிடம் சிறுவர்களுக்கான மற்றொரு நூல் எழுத வேண்டினார். அதன் பலன்தான் இந்நூல். என் சிந்தையில் உதித்த கருத்துகள், நான் படித்த நூல்களின் அனுபவங்கள் அடிப்படையில் இந்நூல் உருவானது.