"புரட்சிக்
கவிஞரின் பாடல்களைப் படிக்கும்போது அவை நம்முடைய இரத்தத்தில் இரத்தமாகக்
கலக்கின்றன; உணர்ச்சி நரம்புகளிலேயே ஊற்றெடுக்கின்றது; படிக்கின்றோம்,
பாரதிதாசனாகின்றோம். காலத்தை உருவாக்கிய கவிஞர் மட்டுமல்ல; காலத்தையே
மாற்றியமைப்பவர், புதுமையும் புரட்சி மனப்பான்மையும் மிக்க பாடல்களைத்
தரும் நம்கவிஞர் உயிர்க்கவி, உண்மைக்கவி - புதுக்கவிதை பாடிய புதுமைக்கவி.
எளிய மக்களின் தசையையும் பிய்க்கும்படியான புரட்சிக் கவிஞரின்
புதுக்கவிதைகளைப் படிக்க வேண்டும், பாட வேண்டும்; பயன் பெற வேண்டும்;
புதுக் கவிதைகளைப் புரட்சிக்கவி போல் பாடிட முன்வரவேண்டும்."