பாண்டியன் பரிசு வரலாறு “சிலம்பை” அடிப்படையாகக் கொண்டு எழுந்தது
சிலப்பதிகாரம். அந்தக் காலம் முடியரசுக் காலம். குடிமகன் ஒருவனின் கதையைக்
காப்பியமாக வார்த்தார் இளங்கோ அடிகள். முடியாட்சி நடைபெற்ற காலத்தில்
குடிமகன் ஒருவனின் கதையை அரசகுடும்பத்தைச் சார்ந்த ஒருவர் காவியமாக்கியது
ஒரு புரட்சி. சிலப்பதிகாரம் ஒரு புரட்சிக் காப்பியமாகின்றது. “பாண்டியன்
பரிசு” என்ற சிறுகாவியம் “பாண்டியன் பரிசு’ என்ற ஆட்சி உரிமையைக் கொண்ட
பேழையை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது.