சத்தியம் - இது சத்தியம்!எல்லாம் வல்ல இறைவனின் ஆணைசொல்லப் போவது யாவையும் உண்மைசத்தியம் - இது சத்தியம்!
பத்துத் திங்கள் சிறையிலிருந்தேன்பள்ளிக்கூட அறையிலிருந்தேன்எத்தனையோ சிறைகளை நான்பார்த்து விட்டேன் போடா! போ!...
(சத்)
தலைக்கு மேலே வெள்ளம் போனால்சாணென்ன முழமென்ன?தன்னை நம்பும் தைரியமிருந்தால்நாளென்ன பொழுதென்ன?விலைக்குமேலே விலைவைத்தாலும்மனிதன் விலையென்ன?உயிர் விட்டு விட்டால்உடல் சுட்டு விட்டால் - அதில்அடுத்த கதை என்ன?
(எல்லாம்)
பஞ்சைப் போட்டு நெருப்பை மறைப்பவன்பைத்தியக் காரனடா!பாவந் தீர்க்கப் பணத்தை இறைப்பவன்பச்சை மடையனடா!நெஞ்சுக்கு நீதியை ஒளித்தே வாழ்பவன்நிச்சயம் மிருகமடா! - நல்லநேர்மையிலும் தன் வேர்வையிலும் - தினம்வாழ்பவன் தெய்வமடா