இராமாயணக்கதைகள் பல மொழிகளில் வெளிவந்துள்ளன. வால்மீகி ராமாயணம், துளசி, ராமாயணம், கம்பராமயணம் ஆகியவை புகழ்பெற்றவை. ஏட்டில் இடம்பெற்றாத பல கதைகளும் நாட்டில் பேசப்படுகின்றன. அவை நல்ல கருத்துக்களை வலியுறுத்த இட்டுக்கட்டப்பட்ட கதைகள் ஆகும். சுவைமிக்க அக்கதைகள் சில சமுதாய நடைமுறைகளுக்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன. அவை பல நீதிகளையும் நியதிகளையும் சுட்டிக்காட்டுகின்றன.
இராமனின் உயிரைக் காப்பதற்காகத்தான் கைகேயி அவனைக் காட்டுக்கு அனுப்பியதாகக்கூறும் ஏட்டில் எழுதாத கதை இந்நூலில் இடம் பெறுகிறது.