பத்தடிக்கு ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடை.. கலர் கலராய் உணவு வகை.. இன்றைய இளைஞர்களை கவர இன்னும் இத்யாதி, இத்யாதிகள். இதுதான் இன்றைய உணவு கலாச்சாரமாய் மாறிவிட்டிருக்கிறது. இருந்தாலும் ஆங்காங்கே புதிது புதிதாய் தோன்றும் இயற்கை உணவகங்களும் தனித்து தெரியவே செய்கின்றன.
கோபிச்செட்டிப்பாளையம் ஆர்ச் அருகில், 3 மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது, 'நிலாச்சோறு' உணவகம். முழுவதும் இயற்கையாய் விளைவிக்கப்பட்ட பொருட்களை கொண்டு உணவு தயாரிக்கப்படுவதுதான் இந்த உணவகத்தின் சிறப்பு என்கிறார் இதன் உரிமையாளர்.