இப்படியாக எங்கள் கனவுகள் !
காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டி தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிள நீரும்,
பத்துப் பன்னிரண்டு - தென்னை மரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச்சுடர் போலே - நிலவொளி
முன்பு வர வேணும்; அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிர் பட வேணும்; என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாய் இளம்
தென்றல் வர வேணும்
பட்டுகலந் திடவே - அங்கொரு
பத்தினிப் பெண் வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டு தர வேணும்...