ஜிவா என்ற பெயரில் என்றும் உயிர் உண்டு. அவர் அரைகுறை அரசியல்வாதி அல்ல. முழுமைபெற்ற சமதர்வாதி. இக்கால அரசியல் ஊழல் பெருச்சாளிகள் ஜீவா என்ற பெயரைச் சொல்லக்கூட அருகதை அற்றவர்கள். மாசற்ற மனித நேயச் சிந்தனைக்குச் சொந்தக்காரரான ஜீவா நல்ல தமிழ் உள்ளங்களில் என்றும் நிறைந்திருக்கிறார். ஜீவாவின் சிந்தனைகள் தமிழ் நெஞ்சங்களில் விதைக்கப்பட்டால்தான் தமிழக அரசியலில் தூய்மையான நாற்றங்கால்கள் தோன்றும். சுரண்டல் கலாசாரத்தை வளர்க்கும் சுயநலக்காரர்கள் ஒழிவார்கள். லஞ்சலாவண்ய சமூக விரோதிகள் அழிவார்கள்.