ஸ்ரீ ராம பக்த ஹனுமான் 1958 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ் திரைப்படமாகும்.[1] வால்மீகி இராமாயணம் இதிகாச கதையின் அடிப்படையில் அமைந்த இத்திரைப்படத்தை பாபுபாய் மிஸ்திரி இயக்கினார். எஸ். என். திரிபாதி அனுமானாக நடித்தார். ஏனைய நடிகர்கள் மஹிபால், அனித்தா குஹா, கிருஷ்ணகுமாரி, ஹெலன் மற்றும் பலர். சித்ரகுப்தா இசையமைத்தார்.