தென்னாடுடைய சிவனே போற்றி என்று பாடினார் மாணிக்கவாசக சுவாமிகள். ஆனால் தமிழ்க் கடவுள் என்கிற திருநாமம் சிவபெருமானுடைய பிள்ளைக்குத்தான் கிடைத்தது. கண்ணனைப் பற்றி எத்தனையோ விதமாகப் பாடிப்பரவி, அனுபவித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். அவற்றுக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் முருகனையும் பிள்ளைத்தமிழ் என்றும், அனுபூதி என்றும், அலங்காரம் என்றும், அலங்காரம் என்றும் விதம்விதமாய்ச் சான்றோர்கள் பாடிப் போயிருக்கிறார்கள்.