விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக வாழ்க்கையின் எல்லாத் துறைகளுமே வெகு வேகமாக, விரிவான முன்னேற்றத்தை அடைந்துகொண்டு வருகின்றன. குறிப்பாக அச்சுத் தொழில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. எவ்வளவோ மாற்றங்கள் புதுமைகள் ஏற்பட்டிருக்கின்றன நாளும் புதிது புதிதாகத் தோன்றிக் கொண்டிருக்கின்றன. அச்சுத் தொழில் மனிதனின் வாழ்க்கையில் குழந்தைப் பருவத்திலிருந்து இரண்டறக் கலந்து இருக்கும் ஆற்றல் பெற்றது.