ஸ்கிரீன் பிரிண்டிங் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஓவியத் துறையின் சகோதரக் கலையாகத் திகழும் இந்தத் திரை அச்சுக்கலை (Silk Screen Printing) உங்கள் வாழ்வில் ஒளியேற்றும் என்பது நிச்சயம். பெரிய எந்திர சாதனங்கள் எதுவும் இல்லாமல் மிகக் குறைந்த செலவில் அச்சிடும் முறைதான் இந்தக் கலையாகும். இந்தக் கலையைக் கற்றால், குறைந்த முதலீட்டில் ( ரூ.1000/ போதும் ) சொந்தத் தொழில் தொடங்கலாம். நிறைய வருவாய் பெறலாம். ஓவியம் வரையும் திறமை இதற்குத் தேவையில்லை. உங்கள் குழந்தைகளக் கூட உங்களுக்குத் துணையாக இதில் ஈடுபடச் செய்யலாம். ஸ்கிரீன் பிரிண்டிங்கினால் காகிதத்தில் மட்டுமின்றி தோல், தகரம், பிளாஸ்டிக், துணிகள், மரம் இவைகள் மீதும் அச்சிடலாம். இதுவே இதன் சிறப்பு. நீங்கள் வேலை செய்பவராக இருந்தாலும், இல்லதரசியாக இருந்தாலும், ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தியும், முழுநேரச் தொழிலாகவும், பணம் சம்பாதிக்க இந்தக் கலை ஒரு வரப்பிரசாதமாகும்.