உலகளவில் நடத்தப்பட்ட பாலியல் குறித்த ஆய்வுகளில் இருந்து மிக முக்கியமான தகவல்களைத் தொகுத்து எழுதப்பட்ட தமிழின் முதல் நூல். மொழிநடையில் ஆபாச உணர்வு எழாமல் கவனத்துடன் எழுதியுள்ளார் நூலாசிரியர்.
முத்தம் கொடுப்பதிலும் கலந்திருக்கிறது காதல் வைரஸ். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம்தான் சரியானது என்பதை அறிவியலும் அங்கீகரிக்கும் அதிசயம்.
கள்ள உறவுகள்: அதிரவைக்கும் அறிவியல் பின்புலம், மற்றும் தீர்வுகள்- ஓர் அலசல்!
புதுயுகமும் பூப்படைதலும்; ஏன் குறைகிறது வயது? ஓரினச்சேர்க்கையாளர்கள் பிறக்கிறார்களா, உருவாக்கப்படுகிறார்களா? -ஆய்வுத் தகவல்கள்.
திருநங்கைகள்: அறிவியல் பின்புலம், பிறப்புக்கான காரணங்கள், சிகிச்சைகள்- விரிவான பதிவு.
பீடோஃபீலியா: குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு; காரணங்கள்,சிகிச்சைகள்!
உச்சக்கட்டம்; புதிரா, புனிதமா?