இங்கு ஒரு நல்லாசிரியரின் அமைவுகள் பற்றியே எழுதுவதுடன் மாணவன்,
சமூகம் என்று அவருடைய ஆளுமை தொடர்பானவற்றோடு நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர் பற்றி எழுத, படித்தவற்றை அறிந்தவற்றை ஒதுக்கி
வைத்துவிட்டு, மாணவர்களை அணுகினேன்; ‘Pupils are the best Judges' அல்லவா?
பல்வேறு வகுப்புகள், பள்ளிகள்...... அவர்கள் தந்த அனுபவங்கள்தான் இங்கே
வார்த்தைகளாகி இருக்கின்றன. ஏனெனில், ஆசிரியமே ஒரு அனுபவம்தானே.
இது அனுபவக் கடலில் ஒரு துளி.