நமக்குத் தெரியாத, நம்மை அதிசயத்தால் ஆழ்த்தும் பல உண்மைகளை இந்தூல் எடுத்துக் கூறுகிறது. சூரியனின் சுழற்சி, பிரபஞ்சம், கிரகங்கள், பூமியின் வயது, முதன்முதலில் பூமியில் உயிர் ஜீவிகள் எப்பொழுது உருவாயின, மனித உடற் கூறுகள், விசித்திரமான மிருகங்கள், பறவைகள், மரம் - செடிகள், போற்றப்படும் இடங்கள், கட்டிடங்கள் ஆகியவயை பற்றி நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.விஞ்ஞான - தொழில் நுட்ப வளர்ச்சியால் மனித சமுதாயம் பெற்ற சாதனைகளையும் இந்நூல் விளக்கிக் கூறுகின்றது.
பொது அறிவை வளர்த்துக் கொள்ளத் தேவைப்படும் இந்நூல் மாணவர்கள், பொதுத் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு பகுதி மக்களுக்கும் பயன்படும்.