அம்பாபலி ஓர் ஆய்வு
சு. நளாயினி
முத்தமிழில் ஒன்றாக விளங்கும் நாடகத்தமிழின் வளத்தைக் காட்டும் வகையில் இருபதாம் நூற்றாண்டில் பல நாடக நூல்கள் எழுந்துள்ளன. அவ்வாறு எழுந்தவை பல்வேறு கதைப்பொருள்களைக் கருவாகக் கொண்டு அமைந்துள்ளன. அந்த வகையில் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கவிதை வடிவில் அமைந்திருக்கும் அம்பாபலி நாடகமானது நாடக இலக்கணத்துடன் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது. உண்மையாக நடந்த வரலாற்றைச் சிறிதும் மாற்றாமல் வரலாற்று நிகழ்ச்சிகள் நடைபெற்ற தன்மையை அவ்வாறே கூறும் வகையில் அமைந்துள்ள அம்பாபலி நாடகம் சிறப்பான கட்டுக்கோப்புடன் அமைந்துள்ளது.