சினிமா மொழிக் கட்டுடைப்பு (De-construction of cinema Language) இந்தத் தலைப்பே இந்த நூலின் உள்ளடக்கத் தன்மையை நமக்குப் புலப்படுத்திவிடுகிறது. சினிமா பற்றிய கோட்பாடுகளை உலக சினிமாக்களை மையப்படுத்தி விவரிக்கின்ற போக்கிலிருந்து இந்த நூல் மாறுபடுகிறது; உள்ளூர் சினிமாவை மையப்படுத்தி, ஒரு பாமரனின் பார்வையில் இருந்து தொடங்கி அது விரிந்து உலக சினிமாக்களன் அடையாளங்களைத்தொட்டு, அதன் தொடர்ச்சியாக அதன் அடையாளங்களைத் தமிழ் சினிமாவில் தேடுவதாக விரிவடைந்து 'புதிய எல்லைகளை நோக்கி விரிந்து கொண்டேசெல்கிறது'.