முத்திரை என்பது ஓர் அடையாளம்.சைகை,குறியீடு என கூறலாம்.இது மிக பழமையான காலத்திலிருந்தே பின்பற்ற பட்டு வருகிறது. ஆசியா மட்டுமல்ல உலகெங்கும் முத்திரைகள் பயன்படுத்த
பட்டு வந்திருக்கிறது.கிறிஸ்தவ மத போதனையிலும் முத்திரைகள் உள்ளன.இரு கைகளையும் தனக்கு முன் நீட்டி கடவுளை வணங்கும் முறை ஓர் உதாரணமாகும் இந்து மதம்,புத்த மதம்,இரண்டிலும் முத்திரைகள் தொன்று தொட்டு பயன்படுத்த பட்டு வருகிறது.
இந்து கடவுளரின் கைகள் நமக்கு பல முத்திரைகளை அறிவிக்கின்றன.பிரம்மா ,விஷ்னு,சிவன் என்ற முக்கடவுளரும் தமது கைகளில் முத்திரையை காட்டுகிறார்கள்.கோவில்களில் நாம் இறைவனை வழிபடும் போது புத்துணர்ச்சி பெறுகிறோம்.இறைவன் கைகளை வைத்திருக்கும் நிலையை கூர்ந்து கவனித்தோமானால் நமக்கு இரகசியம் தெரியும்.
'அபயஹஸ்தம்'என்ற நிலையில் இறைவனது சிலையில் வலது உள்ளங்கை மேல் நோக்கி இருக்கும்.இடது உள்ளங்கை கீழ் நோக்கி இருக்கும். வலது கையால் நமக்கு அபயம் கொடுத்து வாழ்த்துகிறார்.இடது கையால் தன் பாதத்தை காட்டி 'என் பாதங்களை சரணடைந்தால் நீ அனைத்து நன்மைகளையும் பெறுவாய்'என கூறாமல் கூறுகிறார்.அவரின் உள்ளங்கையில் இருந்து வெளிவரும் சக்திக்கதிர்கள் நமக்குள் புகுந்து நமக்கு சக்தியை கொடுக்கிறது. இறைவனை வணங்கி திரும்பும் போது மனம்,உடல் இரண்டும் புத்துணர்ச்சி பெறுகிறது.