நாம் அனைவரும் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள், வாழ்க்கைப் பாதையில்
தென்படும், பயணத்தால் முன்னேற்றத்தைத் தரும் வெற்றிப்படிக் கட்டுகள்'
என்று சொல்லலாம். அதில் “மேலே ஏறுவேன்” என்று முடிவு செய்து, செயல்படத்
துவங்குபவன், முன்னேறத் தயாராகிறான் என்று அர்த்தம். தன்னால் ஓரிரண்டு
படிகளையே தாண்ட முடிந்தாலும், அந்த அளவுக்கு உயர முடியும் என்று
நினைக்கிறவன், முன்னேற வேண்டியதற்கான மனநிலையைக் கொண்டிருக்கிறான் என்று
தெரிந்து கொள்ளலாம். தான் இருக்கும் நிலை என்னவாக இருந்தாலும், என்னவாக
இருக்க வேண்டும் என்ற தீவிர எண்ணம் கொண்டவன் உயர்கிறான். ஏனென்றால் அவன்
இருக்கும் நிகழ்காலத்தில் எத்தகைய சவால்களையும் ஏற்கத் தயாராக இருக்கிறான்.
அதனால் முன்னேறுகிறான்.