ஆன்மீகம் என்பது மாபெரும் சமுத்திரம், புராணம், ஆகமம், வரலாறு, சாஸ்திரம்
என்று எத்தனையோ . உபகிளைகளைக் கொண்டது. ஆன்மீகத்தில் ஊறிய எத்தனை பெரிய
பண்டிதர் என்றாலும் அவர் இன்னும் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய பாடங்கள்
நிச்சயம் நிறைய இருக்கும். பக்தியால் பகவானை அடைய பக்திமான்கள் பல வழிகளை
கடைப்பிடித்துள்ளார்கள். தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் தன் மனதில்
பரமாத்மாவை நிலை நிறுத்திக் கொண்டவர்கள் பலர்.ஆன்மீகம் மனித வாழ்வை
செம்மைப் படுத்தும். தெய்வீக மார்க்கத்தைக் காட்டும். மனிதன் ஒழுக்க
நெறியுடன் வாழத் தொடங்கினாலே ஆன்மீகம் தழைக்க ஆரம்பித்துவிடும்இன்றைய அவசர
உலகில் மக்கள் பெரிய கதைகளை படிக்க நேரமில்லாமல் இருக்கிறார்கள். இளைஞர்கள்
வாழ்க்கை திசை திரும்பாமல் இருக்க ஆன்மீகம் வழி காட்டுகிறது