பத்து
வயதில் அருள்நிலை எய்தி, தன்னில் இருந்து மந்திரங்கள் ஊற்றென எழும்
மகத்துவத்தால் நாதயோகினியாய் மலர்ந்திருக்கும் பாலரிஷி ஸ்ரீ விஸ்வசிராஸினி
அவர்கள் அருளியுள்ள ஆன்மீகக் கருவூலம் இந்நூல்.சித்தர்கள் உலகின்
சூட்சுமங்களுக்குள் நம்மை நடத்திச் செல்லும் ஞானச் சுடரொளி.ரிஷிகளாலும்
சித்தர்களாலும் வழிநடத்தப்படும் ஸ்ரீ பாலரிஷி அவர்கள் பலரும் அறிந்திராத
தகவல்களினூடே வாசகர்களை இந்நூலில் வழி நடத்துகிறார்.வெவ்வேறு சூழல்களில்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உள்நிலை அனுபவத்தின் ஒளிமிக்க வெளிப்பாடுகளாய்
உடனுக்குடன் அவர் தந்த விடைகள் இவை.