குட்டிக் கதைகள். சித்தர்களையும் கட்டுப் போடுமாம் இந்தக் குட்டிக் கதைகள். ஒரு கோமணத் துணிகூட சித்தர்களைக் கட்டுப்படுத்திவிடாது. அத்தகையவர்களிடம் கூட ஒரு குட்டிக் கதையைச் சொல்லிவிட்டால் போதும்! அது அவர்களை நாள் முழுக்கக் கட்டிப் போட்டுவிடும்! அத்தகைய அபார சக்தி அதற்கு உண்டு.