book

பன்னிரு ஆழ்வார்கள் அருளிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் பாகம் - I, II

₹1400
எழுத்தாளர் :த. கோவேந்தன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :1406
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

"அடைவதற்கான வழியும், அடையப்பெறும் பொருளும் (சாதனம், சாத்தியம்) நானே' என்கிறார் ("மாமேகம் சரணம் வ்ரஜ' - பகவத் கீதை) ஸ்ரீகிருஷ்ணர். இதை நன்கு உணர்ந்தவர்களே பன்னிரு ஆழ்வார்கள். இவர்கள் வைணவத்தையும், தமிழையும் தழைத்தோங்கச் செய்ததுடன், பக்தி இலக்கியத்தையும்; அந்தாதி, மடல், தாண்டகம், எழுகூற்றிருக்கை, பாவை, பள்ளியெழுச்சி முதலிய சிற்றிலக்கிய வகைமைகளையும் செழுமையுறச் செய்தனர்.

ஸ்ரீமந்நாராயணனே முழுமுதற் கடவுள்; அவன் எல்லாப் பொருள்களிலும் ஆன்மாவாய்-ஜீவ சாட்சியாய் இருந்து காத்து வருகின்றான். அவனது பெருமை அளவிடற்கரியவை என்பதையும், எட்டெழுத்து மந்திரத்தின் பெருமையையும், பிரேம பக்தியையும் (நாயக-நாயகி பாவம்), சரணாகதி தத்துவத்தையும் எடுத்துரைக்கிறது திவ்யப் பிரபந்தம்.