பெற்றோர்கள் இந்த நூலைத் தனது குழந்தைகளுக்கு - 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாங்கிக்கொடுக்கலாம். "குழந்தைகள் கெட்டுப் போய்விடுவார்கள்" என்ற பழமையான கருத்தை பரணில் தூக்கியெறிந்துவிட்டு, "இன்டர்நெட் யுகத்தில் இதையெல்லாம் குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும்" என்ற மனப்பக்குவத்தை பெற்றோர்கள் வளர்த்துக்கொண்டால், ஒளித்து வைத்துப் படிக்கும் பழக்கம் மறைந்துவிடும். இந்த நூலை எல்லோரும் ஒளிவுமறைவு இல்லாமல் வாசித்துப் பயன்பெறலாம். அந்தளவுக்கு மிகவும் நாசூக்காக இது எழுதப்பட்டுள்ளது.