காமாலை
என்றழைக்கப்படும், மஞ்சள் காமாலையை, பரிசோதனைகள் ஏதும் செய்யாமல், கண்கள்
மஞ்சள் நிறமாவதை வைத்து, முன்னோர்கள் கண்டறிந்தனர். வீட்டு வைத்தியம்
செய்து வந்தனர். எண்ணெய், உப்பு அற்ற உணவு அல்லது புரோட்டீன் சத்து நிறைந்த
உணவுடன், ஆட்டுப்பால், கீழா நெல்லி இலை விழுது கொடுத்து வைத்தியம்
செய்தனர். “டாக்டரிடம் போகாதீர்கள். ஆங்கில மருத்துவத்தில், மஞ்சள்
காமாலைக்கு சிகிச்சையே கிடையாது’ என்றும் கூறினர். ஆனால், அலோபதியில்
சிகிச்சை உண்டு. “ஜானே’ என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து “ஜாண்டிஸ்’ என்ற
ஆங்கில வார்த்தை உருவானது. 19ம் நூற்றாண்டில் தான், “ஜானே’ என்ற வார்த்தையே
உருவானது. எல்லா காமாலையும், மஞ்சள் காமாலை அல்ல என்பதை அப்போதே
மருத்துவர்கள் உணர்ந்திருந்தனர். ஒவ்வொருவரின் உடல் நிலைக்கேற்ப,
பாதிப்புக்கு ஏற்ப, இந்த அறிகுறியின் தன்மை மாறுபடும். சிலர் முற்றிலும்
குணமடைந்தனர்; சிலருக்கு சில காலம் பிடித்தது; சிலர் மரணமடைந்தனர்.