நலவாழ்வுக் கல்வி ; இரண்டாயிரம் ஆண்டில் உலக மக்கள் அனைவருமே நலவாழ்வு பெற வேண்டும் என்று உலக
சுகாதார நிறுவனம் முயன்றுவருகிறது. நலவாழ்வு கல்வி என்ற இந்த நூல் பொதுச்சுகாதார அதிகாரிகள், சமுதாயச்
செவிலிகள், விவசாய விரிவாக்கப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல்
சுகாதாரத்திற்கான வழி காட்டுகிறது. ஒவ்வொருவரும் சுகாதாரமாக வாழ தனி மனிதரும் சமுதாயமும் கடைப்பிடிக்க
வேண்டிய வழி முறைகள் இந்நூலில் விரவிக்கிடக்கின்றன. சுகாதாரக் களப்பணியளர்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக
உள்ளது.சுகாதாரம் பற்றி உரையாற்றுதல், பழமொழிகள் மூலம் சுகாதாரம் பற்றி விளக்குதல், கட்டுக்கதைகள் மூலம்
நலாழ்வு பற்றி எடுத்துரைத்தல், சுவரொட்டிகள் மூலம் சுகாதார விளக்கமளித்தல், ஒலிநாடா, செயிதித்தாள்,
வானொலி, தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு நலவாழ்வு பற்றி அறிவுறுத்துதல் போன்றவை கடைப்பிடிக்கப்பட
வேண்டும்.
_ பதிப்பகத்தார்.