பாறைச்சூறாவளித் துறைமுகம் ;இப்போதும், சுமார் ஒரு மணி நேரத்தில் இதை எல்லாம் இவன் அனுபவிக்க வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் அவள் ஐந்து நிமிடங்கள் நேரம் தாழ்த்து வந்ததிலிருந்து க்ரீம்ஸ்க்கிய் பாலத்தருகே 'மாட்டேன்' என்று சொன்னதுவரை, அவன் மேல் உண்டான இரக்கத்தால் எனக்கு நெஞ்சு வலித்தது.கண்ணீர் வந்தது.அவள் நான்தான், ஆனால் எதையோ இன்னும் அறியாதவன், எதையோ புரிந்துகொள்ளாதவன்,ஏதோ பிசகைச் செய்யாதவன் என்பதை இப்போதுதான் நான் உணர்ந்தேன். நோ இருந்த வேதனையிலிருந்து அவனைத் தப்புவிக்க, அவனுக்கு முன்னெச்சரிக்கை செய்து என் அனுபவத்தால் அவனை வலுப்படுத்த எனக்கு மிகவும் விருப்பம் உண்டாயிற்று.