அழகான அமைதியான புலர் காலை நேரம். குளியலறையிலிருந்து - ஒரு துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டு... இன்னொரு துண்டால் தலையைத் துவட்டிக் கொண்டே தன் அறைக்குள் நுழைந்தான் ரவிசங்கர். ஜன்னல் திறந்து வெளியே பார்த்தான். தரையில் பூத்த தாமரைப் பூப்போல மஞ்சுவின் கோலம் வாசலில் 'பளிச்' என்று மின்னியது. ஜன்னல் வழியாக உள்ளே பாய்ந்த வாடைக் காற்றில்... ஏற்கெனவே ஈரமாயிருந்த அவன் உடல் வெடவெட வென்று நடுங்கத் தொடங்கியது. ஜன்னல் கதவுகளை வேகமாகச் சாத்தி வைத்து அறை விளக்கைப் போட்டான்.