எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக்
கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள்,
அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும்
அடங்கியுள்ளது. சுந்தரவதனி பெற்றத் தாயைத் தேடி தாம் வளர்ந்த
வீட்டிலிருந்து வெளியேறினாள். அவள் தம் தாயைத் தேடிச் செல்வது அன்புக்காக
அன்று. மாறாக, தன் தாயைப் பார்த்து, “ஏன் என்னை ஐந்து லட்சம் ரூபாய்க்கு
விற்றாய்?“ என்று கேட்கதான். ஆனால், தம் தாயைப் பார்த்த பின் அவள் கூறியது
என்ன?