அன்பார்ந்த வாசக உள்ளங்களுக்கு, எனது முதல் நாவலுக்கு தாங்கள் அளித்த உற்சாக வரவேற்பின் பிரதிபலிப்பே தங்களின் கைகளில் இப்பொழுது தவழும் இரண்டாவது நாவல். எழுதுவதற்கு பக்கபலமாய், உறுதுணையாய் இருந்த என் பெற்றோரையும், உற்சாகமும் தைரியமும் அளித்த நல் உள்ளங்களையும், எனது எழுத்தை மேலும் மெரு கூட்ட உதவிய அன்பான எனது திருமதி தோழிகளின் பங்களிப்பையும், அழகிய இத்தருணத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, எனது எழுத்தை அங்கீ கரித்து உங்களிடம் என் எழுத்தினை அறிமுகப்படுத்திய தற்கும், மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு நல்கியதற்கும், புகழ்பெற்ற அருணோதயம் பதிப்பகம் அருணன் ஐயா அவர்களுக்கும் என்றென்றும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். எனது எழுத்தின் அறிமுக உதயம்,அருணோதயத்தின் மூலமே என்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். அன்பும், புரிதலும், விட்டுக் கொடுத்தலும் இருந்து விட்டால் வாழ்க்கை என்றும் அழகிய பூந்தோட்டமே என்பதை என் எழுத்தில் கொண்டு வர இயன்றளவு முயன்றிருக்கிறேன். 'ஆனந்தச் சுடர் ஒளியே...!' என்ற இந்நாவலுக்கும் தங்களின் பேராதரவு தொடர்ந்து கிட்டும் என்ற நம் பிக்கையில்... காத்திருக்கிறேன் தங்களின் மதிப்பு மிக்க கருத்துக்களுக்காக!