இந்த சீன வாஸ்து எளிய நடைமுறைகளையும் பரிகாரங்களையும் உள்ளடக்கியது. அநேகமாக உள்ளதை உள்ளபடியே வைத்து வீட்டின் எப்பகுதியையும் உடைக்காமல் தகர்க்காமல் அதிகச் செலவின்றியே மாற்றங்கள் செய்தும், பரிகாரமாக குறிப்பிட்ட சில பொருள்களை நிறுவியும் மிகுந்த பயனைப் பெறலாம்.