'நெஞ்சில் உறுதி வேண்டும்' என்ற அரிய தலைப்பிலே இளம் தலைமுறையினருக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பும், தெளிவும், அமைதியும் எதையும் சாதிக்க வேண்டும் என்ற மனவுறுதியும் தரவேண்டும் என்ற நன்னோக்கோடு இந்நூலை வெளியிட்டுகிறார்.
மனிதனாகப் பிறந்தவன் ஒரு நாள் மரணம் எய்த்த்தான் வேண்டும். ஆயினும், ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இருக்காமல், தம்முடைய இறப்பிற்குப் பிறகும் சாகாவரம் பெற்ற சரித்திர நாயகர்கள் சிலர் தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் காணிக்கையாக்கி, பிறப்பின் பயனே பிறருக்கு உதவுவதும், தொண்டாற்றுவதும்தான் என்று வாழ்ந்து வரலாறை படைத்ததைப் போல் நாமும் வாழ வேண்டும் என்றால் மனதில் உறுதி வேண்டும். அந்த உறுதி வெற்றிக்கு வித்திடும். எனவே இந்த அரிய நூலில் 55 தலைப்புகளில் பல விழுமிய கருத்துகளைத் தொகுத்து வெளியிடப்பட்டிருக்கிறது.