அறிவால் அறியப்படுபவைகளெல்லாம் 'அறிவியல்' என்றும் இதயத்தால் உணரப்படுபவைகெல்லாம் 'கலையியல்' என்றும் கூறுவர் அறிவுடையோர். கலையியல் அறிவும், அறிவியல் அறிவும் மொழியின் மூலமாகத்தான் மனிதனுகுத் தெளிவுப்படுத்தப்படுகின்றன.
இந்த நூலில், கலைச்சொற்கள், 'மொழி பெயர்ப்பு' என்ற முறையில் மட்டும் இல்லாமல், 'மொழி ஆக்கம்' என்ற முறையிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதில், "Carotene" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு,, 'மஞ்சளம்' என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது புதிய சொல்லாக்கம் ஆகும். உரிமை என்ற சொல்லுடன் 'அம்' என்றும் விகுதியைச் சேர்த்து, 'உரிமம்' என்ற புதிய சொல்லாக்கம் கண்டிருப்பதைப் போன்று, 'மஞ்சள்' நிறமான ஒரு வகைச் சத்துப் பொருளை உணர்த்தும் சொல்லுடன் 'அம்' என்ற விகுதி சேர்க்கப்பட்டு, 'மஞ்சளம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல முயற்சியாகும்.