இக்காலத்தில் மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் பொது மக்களைச்சென்றடையும் நாடகங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நூல் விடிவில் இடம்பெற்ற நாடகங்கள் வாசகர்களை மட்டுமே சென்றடைகின்றன. "தேவை ஒரு திருடன்" என்ற இந்த நகைச்சுவை நாடக நூலின் தலைப்பு ஒரு கேள்விக்குறியை நம் மனதில் எழுப்புகிறது. ஒரு எழுத்தாளனின் சிந்தனை திருடன் கூட தேவையானவன்தான் என்று சிறகடிக்கிறது. எழுத்தாளரின் இதயம் வெறும் எந்திரத்தனமானதல்ல. எப்படியெல்லாம் மக்களின் மனதில் சில கருத்துக்களைப் புகுத்தலாம் என்று தனது எண ஓட்டங்களைப் பறக்கவிட்டுக் கொண்டிருப்பது எழுத்தாளரின் சுதந்திர உரிம. அத்தகு சுதந்திர போக்கில்தான் தேவை ஒரு திருடன் என்ற இந்த நாடக நூலைப் புகழ்பெற்ற எழுத்தாளர் வீராஜ் அவர்கள் படைத்துள்ளார்கள்.