இன்றைக்கு நலமாக சுகமாக சந்தோஷமாக வாழவேண்டும் என்ற நிலை மாறி எல்லோரிடத்திலும் ஒருவித பதற்றம், படபடப்பு, கோபம், எரிச்சல், டென்ஷன் இவைகளினால் ஏற்படும் நோய்கள் அதற்கு மருத்துவம் என்று வாழ்க்கை எந்த ஒரு இலக்கும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. விழுங்கும் மாத்திரை முதலிடம் சாப்பிடும் உணவு இரண்டாம் இடம் என்ற நிலை ஆகிவிட்டது. மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை உடல் பருமன், தொப்பை, சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு மற்றும் பெண்களுக்கு வந்திருக்கக்கூடிய கர்ப்பப்பை சார்ந்த வியாதிகள், மூட்டுவலி, கழுத்துவலி மற்றும் மனம் சார்ந்த வியாதிகளான மன அழுத்தம், பதற்றம், மனச்சிதைவு என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கெல்லாம் தீர்வு இருக்கிறதா என்றால் நிச்சயமாக யோகாசனத்தில் மட்டும் தான் இருக்கிறது.