உலக சுகாதார நிறுவனத்தின் காசநோய் திட்ட அமைப்பால் இந்த வழிகாட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தேசியக் காசநோய் திட்டங்களில் காசநோய்க்குச் சிறந்த சிகிச்சைத் திட்டங்கள் அளிக்க உறுதுணைபுரிய முடியும். இந்த வழிகாட்டுத் தகவல்களின் முக்கியக் குறிக்கோள்கள்:- i) எளிமையும் தக அமைவையும் அடிப்படையாகக் கொண்டு பயனளிக்கக்கூடிய குறுகிய கால வேதியிய சிகிச்சைகளைக் சீரமைத்தல். ii) குறுகிய கால வேதியிய சிகிச்சையை, பலன் அளிக்கும் வகையில் எவ்விதம் பயன்படுத்துவது என விளக்கம் அளித்தல்; iii) காச எதிர் மருந்துகளின் விலையைப் பற்றியும், தரம் வாய்ந்த மருந்துகளை இடைவிடாது வினியோகம் செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் தகவல் தருதல், ஆகியவையாகும்.