முற்போக்குச் சிந்தனையாளரும், பல நூல்களைப் படைத்துப் பாராட்டுப் பெற்றவருமான எழுத்தாளர் ஏ.எம். சாலன் அவர்கள் கலை, இலக்கியப் படைப்புகள், படைப்பாளிகள், விமர்சனம் ஆகியவற்றைத் தொடர்பு படுத்தி ஆய்வுநோக்கில் அழகுற ஆக்கித் தந்துள்ளார். தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தமட்டில் நம் இலக்கியத் திறனாய்வாளர்களின் முயற்சியினால் பிரபலமான இலக்கியவாதிகளும் இலக்கியப் படைப்புகளும் ஏராளம் என்று கூறிப் படைப்புகளையும் படைப்பாளி களையும் வேரில் தொடங்கி உச்சந்தளிர் வரை விமர்ச்சிக்கிறார்.